
Full transcript
2026 |OCTOBER MONTHLY PREDICTIONS | SAGITTARIUS-PISCES|அக்டோபர் மாத பலன்கள் | Aditya Guruji |G Rasi
அறிமுகம் மற்றும் கிரக நிலை
00:03[இசை] நேயர்கள் அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துக்கள். எல்லோரும் நன்றாக இருப்பீர்கள். [செறுமுதல்] இதோ அக்டோபர் மாதம் பிறக்க போகிறது. செப்டம்பர் மாதம் எனக்கு கொஞ்சம் பரவாயில்லைங்க. ஆகஸ்ட்ல தான் கொஞ்சம் ரொம்ப சுருண்டு போனேன் அப்படிங்கிற மாதிரி ஏதோ ஒரு விதத்தில் செப்டம்பர் கொடுத்த சின்ன சின்ன ஒரு சந்தோஷங்களை அக்டோபர் நீடிக்குமா அல்லது அக்டோபர்ல ஏதாவது ஒரு இது மாதிரியான விஷயங்கள் வருமா அப்படின்னு கொஞ்சம் பெரிய அளவுல எதிர்பார்ப்புகள் நிச்சயமாக நிறைய பேருக்கு கண்டிப்பாக இருக்கும். எல்லாருக்குமே வந்து ஒரு மாத பலன்கள் வார பலன்கள் ராசி பலன்கள் பார்க்கறதுல ஒரு ஆறுதல் என்ன அப்படின்னு சொன்னா இப்பயாவது நல்லா இருக்க மாட்டோமா இன்னைக்காவது நல்லா இருந்துர மாட்டோனா அப்படின்ற ஒரு எண்ணங்கள் கண்டிப்பாக எல்லாருக்குமே உண்டு. ஆக இந்த அக்டோபர்
00:45மாதம் எப்படி இருக்கும் கிரக நிலைகள் உண்மையிலேே நல்லா இருக்கு உண்மையிலேயே நல்லா இருக்கு. செவ்வாய் நீசபங்க ராஜயோகத்தில் இருக்க சுக்கிரன் ஆட்சியில் இருக்க புதன் வலுவாக சூரியன் புதன் சுக்கிரன் சுக்கரனுடைய வீட்டில் இருக்க செவ்வாயும் சனியும் உச்சகுருவின் தொடர்பில் இருக்க எல்லா கிரகங்களும் மேக்ஸிமம் ராகு கேதுக்களை தவிர்த்து எல்லா கிரகங்களும் சுபத்தன்மையோடு நான் அடிக்கடி சொல்லக்கூடிய சுபத்துவமாக இருக்கின்ற இந்த அமைப்பு எல்லாருக்குமே 12 ராசிக்காரர்களுக்கும் உண்மையிலேயே ஜென்ம சனியின் ஆதிக்கத்தினால் துவண்டு போயிருக்கக்கூடிய மீன ராசிக்காரர்களுக்கும் அட்டமத்து சனியின் ஆதிக்கத்தில் இருக்கக்கூடிய சிம்ம ராசிக்காரர்களுக்கும் கூட நன்மை செய்யக்கூடிய நல்ல மாதமா இருக்கும் இப்போது 12 ராசிகளுக்கும் தனித்தனியாக எப்படிப்பட்ட பலன்களை அக்டோபர் மாதம்
தனுசு ராசி பலன்கள்
01:27செய்யும் என்பதை பார்க்கலாம் தனுசு தனுசு ராசிக்காரர்களுக்கு இப்போது எட்டாம் இடத்தில சந்த குருமங்கல யோகம் ஏற்பட்டிருக்கின்ற அருமையான ஒரு நல்ல மாதமா இந்த மாதம் அமையுங்க ஐந்தாம் அதிபதி இன்றைக்கு நீச்சனாகி இருக்கிறார் அவரே வந்து 12 ஆம் அதிபதியாகவும் வரக்கூடியவர்ஐந்து 12க்குடையவர் இன்றைக்கு நீச்சனாகி இரண்டாம் வீட்டை பார்ப்பது என்பது வெளிநாடு வெளிமாநிலம் தூர இடங்கள் ஏற்றுமதி இறக்குமதி அல்லது ஒரு இடத்துக்கு கொண்டு போய் கொடுக்கக்கூடிய குட்ஸ் டெலிவரின்னு சொல்றோம் இல்லையா ஒரு கொரியர் செய்றீங்க ஒரு டிரான்ஸ்போர்ட் நடத்துறீங்க ஒரு இடத்திற்கு ஒரே இடத்தில இல்லாம அப்படியே கொண்டு போய் கொடுக்கக்கூடிய அமைப்புகளோடு தொடர்பு கொண்டிருக்கக்கூடிய அத்தனை தனுசு ராசிக்காரர்களுக்கும் பணவரவுகள் கிடைக்கக்கூடிய அற்புதமான நல்ல
02:07மாதமாக இந்த மாதம் அமைந்திருக்கு இதைவிட மேல பாக்கியாதிபதியாகிய சூரியன் இப்போது 11ஆம் இடத்தில் இருக்கிறார் சூரியன் புதன் சுக்கிரன் மூவருமே 11ஆம் இடத்தில் வலுத்திருப்பது ஒரு மிகப்பெரிய கொடுப்பனையான ஒரு அமைப்பு 11 ஆம் இடம் வெற்றியை குறிக்கக்கூடிய இடம் தந்தை சார்ந்த விஷயங்கள்ல் இதுவரைக்கும் இருந்து வந்த கவலைகள் விலக போகிறது. அப்பாவுக்கு உடம்பு சரல அல்லது அப்பாங்க எனக்கு சப்போர்ட்டா இல்ல அக்காவுக்கு இருக்கிறார் தங்கச்சிக்கு இருக்கிறார். தம்பியதான் கவனிக்கிறார் அண்ணன தான் கவனிக்கிறாரு. அப்பா உங்களை கவனிக்க போறார். உங்களை மட்டும் கவனிக்க போறார். தந்தை வழி சொத்துக்களை அனுபவிக்க முடியாமல் இருந்த நிலைமைகள் அக்டோபர் மாதம் 15ஆம் தேதிக்கு பிறகு சூரியன் நீச்சபங்கத்தை அடைவதால் அற்புதமான மாற்றத்தை கண்டிப்பாக அடைய
02:41போகின்றன. போட்டிகள்ல வெற்றிகள் கிடைக்க போகுது. இன்டர்வியூக்கு போறவங்க எல்லாம் இந்த மாசம் 15ஆம் தேதிக்கு பிறகு சக்சஸ் ஆகும். 15ஆம் தேதிக்கு பிறகு வேலைக்கே சேர்ந்துருவீங்க. ஏன்னா பாக்கியாதிபதி நீச்சபங்க ராஜயோகத்தில் இருப்பது என்பது மிகப்பெரிய ஒரு உயர்வான ஒரு நிலைமை. கல்யாணம் ஆகாதவங்களுக்கு கல்யாணம் ஆகற அமைப்பு நிச்சயார்த்தம் போன்றவைகள் ஆகக்கூடிய ஒரு நிலைமைகள். புத்திர பாக்கியம் கிடைக்கக்கூடிய அமைப்பு, வீடு வாங்கணும், கார் வாங்கணும் இதுதெல்லாம் கொஞ்சம் அப்படியே பட்ஜெட் போட்டு வச்சிருக்கறேன். வருமானத்தைதான் காணும். பேப்பர்ல எல்லாம் பட்ஜெட் போட்டு வச்சிருக்கறேன். மூலையில எல்லாம் எழுதி வச்சிருக்கறேன். மொபைல்ல திறந்தாலே எல்லாம் கணக்காதான் இருக்கு. காசதான் காணும் காசு வரப்போகுதுங்க. சோசியல் மீடியா கை கொடுக்க போகுதுங்க. திடீர்
03:15லாபம் வரப்போகுதுங்க. ஏற்கனவே ஷேர் மார்க்கெட்ல காசு பணத்தை விட்டேன். திரும்ப பிடிக்க முடியுமா? பிடிக்க முடியுங்கா 15ஆம் தேதிக்கு பிறகு 15ஆம் தேதிக்கு பிறகு இப்போது 10ஆம் இடத்தில் இருக்கக்கூடிய சூரியன் 11 ஆம் இடத்திற்கு மாறப்போவது என்பது மிகப்பெரிய நல்ல அமைப்பு.ஒன்பது 10 11க்குடையவர்கள் மூன்று பேரும் 11 ஆம் இடத்தில் இருக்கறாங்க. ஒன்பதுக்குடைய சூரியன் 10க்குடைய புதன் 11க்குடைய சுக்கிரன் இவர்கள் மூவரும் 11 ஆம் இடத்தில் இருக்கின்ற காரணத்தினால் எல்லாத்திலயும் ஒரு வெற்றி அவங்க அவங்க வயதிற்கு கேட்டறார் போல தசாபக்திகளை கேட்டறார் போல சிலருக்கு காசு பணத்தை விட ஹெல்த் முக்கியமா இருக்கும் கடனை தீக்கறது முக்கியமா இருக்கும். பொண்டாட்டி பிள்ளை மேல ரொம்ப பெரிய ஒரு பாசம் ஆசை இருக்கும். புருஷனுடைய நல்வழி நமக்கு தேவையா
மகர ராசி பலன்கள்
03:53இருக்கும். இந்த மாதிரியான விஷயங்கள்ல கொஞ்சம் என்ன கண் திறந்து பார்க்க மாட்டாயா பரம்பொருளே என்கின்ற எண்ணத்தில குறிப்பா தனுசு ராசிக்கார சகோதரிகளுக்கு சொல்றேன். இவங்க எல்லாருக்குமே நல்ல மாற்றங்கள் தெரியக்கூடிய உண்மையிலேயே ஒரு நல்லவைகள் நடக்கக்கூடிய மாதமாகவே இந்த மாதம் அமைஞ்சிருக்குங்க. எல்லாத்திற்கும் காரணம் ராசிநாதன் உச்சமாக இருப்பது. ஆகவே எதிர்பாராத மாற்றங்கள் எதிர்பாராத முன்னேற்றங்கள் இருக்கக்கூடிய அருமையான மாதம் அக்டோபர் மாதம் தனுசு ராசிக்காரர்கள் எல்லோருக்கும் மகரம் மகர ராசிக்காரர்களுக்கு ராசியும் ராசிநாதனும் உச்சகுருவின் பார்வையில் இருக்கக்கூடிய ஒரு சிறப்பான மாதமாக இந்த மாதம் அமையும். இதுல என்னன்னா லாபாதிபதி உங்களுக்கு ஏழாம் இடத்தில உச்சனாகி குருமங்கல யோகத்தில் இருக்கிறார் நீச்சபங்க ராஜ யோகத்தில இருக்கிறார். இது
04:35ஒரு மிகப்பெரிய ஒரு கொடுப்பினை படிப்படியாக மகர ராசிக்காரர்களுக்கு முன்னேற்றங்கள் கண்ணுக்கு நேராக தெரியக்கூடிய அமைப்பு இருக்கிறது. [செறுமுதல்] 90% பேர் கொஞ்சம் ரெக்கவர் ஆயிட்டீங்க. ஆனா ஒரு 10 % பேர் ரெக்கவர் ஆகல. அதுதான் அந்த பிறந்த ஜாதக அமைப்புன்னு நாங்க சொல்றோம். பிறந்த ஜாதக அமைப்புல இன்னும் கொஞ்சம் கஷ்டம்தாங்க. ஆனா பரவாயில்ல நம்பிக்கை இருக்கு கையில கிடைக்கலையே ஜூன் மாசத்தில இருந்து நீங்க சொல்ற மாதிரி ஏதோ ஒரு மாற்றங்கள் தெரியதாங்க செயுது. மாற்றங்கள் தெரிஞ்சு என்ன பிரயோஜனம்? கையில கிடைக்கணும் இல்லையா? நான் போன மாதம் கூட ஏதோ ஒரு ராசிக்கு இப்படித்தான் பலன் சொன்னேன். அதாவது தூரத்துல நடுக்கடலில் இருப்பதற்கும் தூரத்தை கரை தெரிவதற்கும் வித்தியாசம்னு சொன்னேன். நடுக்கடல்ல இன்னும் ஒரு 10% இருக்கறீங்க. ஆனா
05:12உங்களுக்கு தூரத்தில கரை தெரியுது. எந்த பக்கம் நீச்சல் அடிச்சு போகணும்னு தெரிஞ்சிரும் இல்லையா அந்த மாதிரியான ஒரு மனநிலைமையில இந்த அக்டோபர் மாதம் மகர ராசிக்காரர்கள் இருப்பீர்கள். பத்தாம் இடத்தில் சூரியன் புதன், சுக்கிரன் சேர்ந்திருப்பது ஒன்பது பத்து குடையவர்கள் சேர்ந்திருப்பது மிகப்பெரிய யோக பலன். எட்டாம் அதிபதி இப்போது நீச்சனாக இருப்பதால் இதுவரைக்குமே ஒரு நெகட்டிவவாக இருந்த விஷயங்கள் இந்த மாசம் 15ஆம் தேதிக்கு பிறகு விலகும். எதிரி கண்ணுக்கு தெரிவார் நண்பர் கண்ணுக்கு தெரியும். எதிர்ப்புகள் தன்னை அதாவது நம்மகிட்ட பேசிக்கிட்டே நல்லவன் மாதிரி நடிச்சுகிட்டே நமக்கு முதுகவுக்கு பின்னாடி பேசி சில வேலைகளை செஞ்சாங்கல்ல துரோகிகள் எதிரிகள் வேற துரோகிகள் வேற துரோகிகளை இப்போது நீங்கள் அடையாளம் கண்டு அதை அப்படியே விளக்கி வச்சு துரோகத்தை
05:51துரோகிகளை அடையாளம் கண்டாலே நம்முடைய பாதை சரியாயிடும் அப்படிங்கறதுதான் உண்மை அந்த பாதை இந்த மாசம் சரியாக போகுது 15ஆம் தேதிக்கு மேல அட்டமாதிபதி நீச்சனாகி பத்தாம் இடத்தில் இருப்பதால் தொழில் முன்னேற்றத்தை தடுத்துக் கொண்டிருந்த விஷயங்கள் இப்போது அப்படியே உங்களை விட்டு வெளியே போகும் மனக்கட்டுப்பாடு வரும். மனக்கட்டுப்பாடு ரொம்ப ரொம்ப முக்கியம். உடையவன் இல்லா இருக்கை பால் அப்படின்னு பெரியவங்க சொன்னாங்க இல்லையா அதற்கு காரணம் கடை வைக்கிறது பத்தாது தொழில் வைக்கிறது பத்தாது தொழிலை நீ கவனிக்கணும்ன்றது. இதுவரைக்கும் நாலஞ்சு வருஷமா தொழிலை கவனிக்க முடியாம இருந்தா அத்தனை பேருக்குமே இப்போது தொழில் மீது பற்று வரக்கூடிய அமைப்பு தொழிலை கவனிக்க கூடிய அமைப்புகள் நிச்சயமாக வந்திருக்கின்றன. எல்லாத்துலயும் ஒரு அதிஷ்டம் இல்லைன்னு நினைச்சவங்களுக்கு
06:25அதிஷ்டம் பிறக்க போகிறது 15ஆம் தேதிக்கு பிறகு சுக்கிரன் புதன் சூரியன் வந்து பத்தாம் இடத்தில் சேருகின்ற அந்த அமைப்பு எதிர்பாராத அதிஷ்டம் எதிர்பாராத நன்மை பங்குச்சந்தை லாபம் இதுவரைக்கும் ஏமாந்த ஒரு விஷயத்தில அப்படியே விரயங்கள் தடுத்து நிறுத்தப்படக்கூடிய அமைப்பு வீடு வாங்கக்கூடிய அமைப்பு காடு வாங்கக்கூடிய அமைப்பு நிலத்திற்கு அட்வான்ஸ் கொடுக்கக்கூடிய அமைப்பு அஞ ரூபாய்க்கு வாங்கி போடுறது 50 லட்சம் ஆகும் என்கின்ற ஒரு நம்பிக்கை இததான் எதிர்பாராத மல்டிபிள் திடீர் அதிஷ்டம்னு சொல்றோம் இந்த திடீர் அதிஷ்டம்ல்லாம் இதுவரைக்கும் இல்லாத அத்தனை மகர ராசிக்காரர்களுக்கும் இப்போது அப்படியே படிப்படியாக கிடைக்கக்கூடிய ஒரு நல்ல மாதமாகவே இந்த மாதம் கண்டிப்பா அமைஞ்சிருக்குங்க. ஒரு முன்னேற்றம் கண்டிப்பாக இருக்கும். சகோதரிகளுக்கு பெரிய அளவுல கணவன்
கும்ப ராசி பலன்கள்
07:04பேர்லயும் குழந்தைகளின் பேர் எதிர்வரைக்கும் இருந்து வந்த சில விஷயங்கள் எல்லாம் மாற்றங்கள்ல்லாம் இப்போது வரக்கூடிய அமைப்பு கண்டிப்பாக இருக்கிறது. எதையும் சாதிக்கக்கூடிய நல்ல மாதங்க மகர ராசிக்காரர்களுக்கு இந்த 2026 அக்டோபர் மாதம். கும்பம் கும்ப ராசிக்காரர்களுக்கு பாக்கிய ஸ்தானத்தில் இப்போது அப்படியே அருமையான அமைப்பு நான்கு ஐந்துக்குடையவர்கள் எல்லாம் இப்போது ஒன்பதாம் இடத்தில் சேர்ந்திருப்பது. ஏழாம் அதிபதியும் இன்றைக்கு சுக்கிரனோடு சேர்ந்திருப்பது மிகப்பெரிய நல்ல அமைப்பு. கணவனாலயோ மனைவினாலயோ இதுவரைக்கும் வந்த மன அழுத்தங்கள் விலகும். பிரிஞ்சு போயிடலாம்னு கோர்ட்ல கேச கேச போட்டுிட்டு இருந்துட்டு இந்த மனுஷன் திருந்தவே மாட்டாரு சரியாவே வராது. எத்தனை முறை நம்ம சொன்னாலும் இந்த ஆள் நடிக்கிறாருன்ற மாதிரியாக கும்பராசிக்கார சகோதரிகளுக்கு
07:44கணவர் பேரில் இருந்து வந்த வருத்தம் குழந்தைகளோடு நம்ம வெளியே போயடுவோம் வேண்டாம் அப்படின்னு ஒரு விட்டு விலகக்கூடிய தன்மைகளில் இருந்தவர்கள் எல்லாருக்குமே இருக்கலாம் பொறுத்து பார்க்கலாம் ஒரு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம். குழந்தைகள் பாதிக்கப்பட போகுதுன்னு பிரிந்த குடும்பம் மீண்டும் சேரக்கூடிய அமைப்புகள் இருக்கக்கூடிய அருமையான மாதமாக இந்த மாதம் அப்படியே கும்ப ராசிக்காரர்களுக்கு அமைஞ்சிருக்கு. ஏழாம் அதிபதி நீச்சனாக இருந்தாலும் நீச்சபங்க ராஜயோகத்தில் இருக்கிறார் இல்லையா இளையவர்களுக்கு 2kே கிட்ஸ்க்கு ஃபர்ஸ்ட் மேரேஜ் பெயலியர் ஆச்சு இல்லையா அவங்களுக்குெல்லாம் செகண்ட் மேரேஜ்க்கான நல்ல அமைப்பு இப்போது கண்டிப்பா உண்டு. ஜென்மச்சனையின் ஆதிக்கத்தினால் பெண்களாலும் ஆண்களாலும் மன அழுத்தத்தை அடைந்தவர்கள். ராசிபலன்றது ரெண்டு
08:19பேருக்கும்தான் பொம்பள பொம்பளை மட்டும்தான் ஏமாத்துவாங்கல்ல. ஆம்பளைங்கள ஏமாத்ததான செய்வாங்க என்ன பெண்கள் ஏமாத்தனா ஆம்பளைங்க தாடி வச்சுக்கிட்டு அப்படி இப்படின்னட்டு ஓ மாயம் உலகே மாயம்னு அப்படியே கொஞ்சம் சீன் காட்டிக்கிட்டு இருப்பீங்க ஆம்பளை ஏமாத்துனா எந்த பொம்பளையும் வெளியே சொல்றது இல்லை அப்படியே உள்ளுக்குள்ள அழுதுகிட்டு என் தலை எழுத்து இவ்வளவுதான் அப்படின்றதுனாலதான் ஆம்பளை பண்ற அவ்வளவு துரோகமும் அவ்வளவு இதுமும் வெளிய வர்றது இல்லை உண்மையே சொல்லப்போனா கும்ப ராசிக்காரர்களுக்கு ஜென்மச்சனியில் ஏற்பட்ட அத்தனை தாக்கங்களும் இப்போது இந்த மாதத்தில இருந்தே அப்படியே படிப்படியா அப்படியே விலகக்கூடிய அமைப்புகள் கண்டிப்பாக உண்டுங்க ஒன்பதாம் இடத்தில சூரியன் புதன் சுக்கிரன் சேர்ந்திருப்பது சுக்கிரன் ஆட்சியாக இருப்பது மிகப்பெரிய
08:55கொடுப்பினை ஆகவே குடும்பம் அமைதியாக இருக்கும் நல்லவைகள் நடக்கும் பாக்கியங்கள் கிடைக்கும் ஆன்மீக யாத்திரைகள் உண்டு தெய்வ ஆதரவு தெய்வ அனுகூலம் கிடைக்கக்கூடிய அமைப்புகள் கண்டிப்பாக நடக்கும் சித்தர்களுடைய ஆசிகள் கிடைக்கும் நீங்களே வந்து ஒரு திருப்பணி செய்யக்கூடிய அளவிற்கு ஒரு கும்பாபிஷயத்துக்கு ஒரு ப ரூபா கொடுக்கக்கூடிய அளவிற்கு வருமானங்கள் வரக்கூடிய நிலைமைகள் இப்போது கண்டிப்பாக இருக்கின்றன சிலருக்கு தவம் தியானம் யோகா போன்ற பயிற்சி மையங்கள்ல் ஒரு ஈடுபாடு நிச்சயமாக வரும் எதையும் சாதிக்கக்கூடிய வல்லமை இப்போது கும்ப ராசிக்காரர்களுக்கு படிப்படியாக வந்து கொண்டிருக்கிறது மிக மிக முக்கியமாக அடுத்தடுத்து வரக்கூடிய டிசம்பர் மாதம் பஸ்ட் வீக்ல ராகுகேது பெயிற்சி உங்களுக்கு 12ஆல வருது அது பர்ஸ்ட் நல்ல பாயிண்ட் அதற்கடுத்து ஜூன்
09:34மாசம் சனி பெயிற்சி மூன்றாம் இடத்திற்கு போகிறது அடுத்த வருடம் உங்களை பிடிப்பதற்கு உங்களை கையில் பிடிப்பதற்கு ஆளில்லை என்பதே நிஜம். ஜூன் மாதத்திற்கு பிறகு உங்களுக்கு வந்து அஷ்டம ஜென்ம ஏழரச்சனை விலகி மூன்றாம் இடத்திற்கு சனி போவதும் டிசம்பர் மாதத்திலிருந்து ராசியில் இருக்கக்கூடிய ராகு பகவான் அப்படியே வெளியேறுவதும் இதுவரைக்குமே சுறுசுறுப்பு இல்லாதவர்கள் சோம்பலாக இருந்தவர்கள் தன்னம்பிக்கையற்று இருந்தவர்கள் புத்துணர்ச்சி இல்லாமல் இருந்த அத்தனை பேருக்கும் ஒரு புதிய மனிதனாக இன்றுதான் புதிதாய் பிறந்தோம் என்கின்ற மாதிரியாக ஒரு உற்சாகத்தை கொடுக்கும். இதோ கண்ணு கட்டுன தூரத்துல ரெண்டு மாசத்துல எல்லா பெயிற்சியும் வரப்போகுது. இ இந்த பெயிற்சிக்கு அப்புறம் நீங்க நல்லா இருக்கணும்ன்றதுனால இந்த அக்டோபர் மாதத்தில இருந்தே வேலை தொழில்
மீன ராசி பலன்கள்
10:12வியாபாரம் விவசாயம் எல்லா அமைப்புகளும் ஜீவன அமைப்புகளும் கை கொடுக்கக்கூடிய பணம் வரக்கூடிய நல்ல மாதமாக அமைஞ்சிருக்குங்க. அக்டோபர் மாதம் கும்ப ராசிக்காரர்கள் எல்லோருக்கும் வயதிற்கு ஏற்றார் போல. மீனம் மீன ராசிக்காரர்களுக்கு எட்டாம் இடத்தில எல்லா கிரகங்களும் சேர்ந்து கும்மி அடிக்குது. ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு ஒரு மாதிரியான மன அழுத்தம் இருக்கும். ஆறு எட்டு குடையவர்கள் இன்றைக்கு ஆறா எட்டாம் இடத்தில ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். ஆனா நல்ல யோகம் பாருங்க ராசிநாதன் வலுவா வந்து உட்கார்ந்திருக்கிறார். ஒன்பது படையவர்கள் ஒன்று சேர்ந்திருக்கின்ற தர்மகர்மாதிபதி யோகம் குருமங்கல யோகம் நீச்சபங்க ராஜயோகம்னு அஞ்சாம் இடத்தில வலிமையாக இருக்குது. எல்லாத்திலயும் பெரிய அமைப்புகள் இப்போது உண்டு. ஆனாலும் ரேவதி நட்சத்திரக்கார்களும் உத்திரட்டாதி மூணாம்
10:52பாதம் நாலாம் பாத காரங்கள இப்ப நீங்க நல்லாவே இல்லை ஏன்னா சனி அப்படியே வக்கரகதியில இங்கயும் அங்கேயும் போய்கிட்டு போய்கிட்டு கிடக்கிறார். இந்த அமைப்பில இளைஞர்களை தவிர்த்து மற்றவர்கள் எல்லாருக்குமே எதிர்பாராத நன்மைகள் எதிர்பாராத அதிஷ்டங்கள் எதிர்பாராத பயணங்கள் அதன் மூலமாக நன்மைகள் எதிர்பாராத அறிமுகங்கள் எதிர்பாராத லாபங்கள் இதெல்லாம் கண்டிப்பா கிடைக்கும் இதுல ஒன்னாவது கண்டிப்பா மீன ராசிக்காரர்களுக்கு உண்டு எதிர்பாராத பயணம் எதிர்பாராத நன்மை எதிர்பாராத அறிமுகம் எதிர்பாராத லாபம் இதுல ஏதாவது ஒன்னு கண்டிப்பா நினைக்கும் ஏன்னா எட்டு வந்து சுபத்துவமாகிய ஆறு எட்டு ஏழுக்குடையவர்கள் ஒன்னா சேர்ந்திருக்கின்ற காரணத்தினால அதே மாதிரி ராசியில் இருக்கக்கூடிய சனியை உங்களை குழப்பி ருக்கக்கூடிய சனியை இப்போது உச்சகுரு பார்க்கிறார் சனியும் செவ்வாயும்
11:32உச்சகுருவின் தொடர்பில் இருக்கிறார்கள் இதுவே ஒரு பெரிய நல்ல கொடுப்பினை வேலை போனவங்களுக்கு வேலை தேடிக்கிட்டு இருந்தவங்களுக்கு இந்த அக்டோபர் மாதம் 15ஆம் தேதிக்கு பிறகு நல்லவைகள் நடக்க போகின்றன சிலர் தூர இடங்களுக்கு போக போறீங்க பெங்களூர் ஹைதராபாத் டெல்லி பாம்பே கல்கத்தா அந்த மாதிரியான வட மாநிலங்கள்ல் வேலை வட இது வெளி வெளிநாடுகள்ல் வேலை இந்த மாதிரியான விஷயங்களுக்கு ஆசைப்பட்டவங்களுக்கு அது அப்படியே கிடைக்கக்கூடிய அமைப்பு தாய் தகப்பனை பிரிஞ்சு தூர இடத்திற்கு போகக்கூடிய அமைப்பு இப்போது கண்டிப்பாக உங்கள் எல்லாருக்குமே இப்ப அப்படியே படிப்படியா உண்டுங்க பெரிய அளவுல மோசமாக இருக்காது 40 வயது தாண்டியவர்களுக்கு நல்ல யோகங்கள் கண்டிப்பாக உண்டு அதிலும் குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு ஒரு நல்ல நிகழ்வை நடத்தி காட்ட முடியலையே கல்யாணம்
12:12பண்ண முடியல பூப்பு புனித நீராட்டு விழா வலகாப்பு இது எதுவுமே வீட்ல நடக்கலையே கெட்டி மேல சத்தம் வீட்டில் கேட்கவில்லையே என்கின்ற கவலையில் இருக்க கூடியவர்கள் எல்லோருக்குமே இந்த மாதம் அல்ல அடுத்த மாதத்திலிருந்தே நல்லவைகள் நடக்கும் என்பதற்கான அச்சாரமாக சில விஷயங்கள் நடக்கக்கூடிய அமைப்புள் உண்டு தடைபட்ட திருமணம் இப்போது கண்டிப்பாக அத்தனை மீன ராசிக்காரர்களுடைய வீட்டிலயும் நடக்கும். மீன ராசிக்காரர்கள் கஷ்டங்களை 90% தாண்டிட்டீங்க. அடுத்த ஜூன் மாதத்திற்கு பிறகு ஜென்சனை விலக போகிறது திரும்ப ஜென்சனை வரவே வராது மறுபடியும் வரதுக்கு 25 வருஷம் 27 வருஷம் ஆகும். ஆக அந்த ஜென்மசனையின் தாக்கத்தினால் இளைய பருவத்தினருக்கு இப்போது இருக்கக்கூடிய ஒரு முட்டுக்கட்டைகள் முட்டுக்கட்டைகள் சுணக்கங்கள் தடைகள் எல்லாமே இந்த மாதத்தில இருந்து படிப்படியா
12:51விலகும் இந்த மாசமே விலைடுன்னு சொல்ல மாட்டேன் டக்குன்னல்லாம் அப்படி எல்லாம் சொல்ல முடியாது. அவரவருடைய பிறந்த ஜாதக அமைப்பின் படி 90% ரேவதி நட்சத்திரக்காரர்கள் 90% மீன ராசிக்காரர்கள் கஷ்டப்பட்டுிட்டு இருக்கறீங்க ஒரு 10% பேர் நல்லா இருக்கறீங்க அப்பா இந்த அம்மா இப்பதான்பா சூப்பரா இருக்கு எனக்கு என்ன ஏழர சனைன்றீங்க ஜென்ம சனின்றீங்க இந்தா இவ்வளவு சம்பாரிச்சேன் அவ்வளவு சம்பாரிச்சேன் இவர்கள் எல்லாருக்குமே உண்மையிலேயே நல்ல மாற்றங்களை கொடுக்கக்கூடிய ஒரு சிறப்பான எதிர்காலம் நன்றாக இருக்கும் என்கின்ற நம்பிக்கையை கொடுக்கக்கூடிய நல்ல மாதங்க மீன ராசிக்காரர்கள் எல்லோருக்கும் இந்த அக்டோபர் மாதம்